முகப்பு
சிவகங்கை

காரைக்குடி ரயில் நிலையத்தில் செகந்திராபாத் விரைவு ரயிலுக்கு வரவேற்பு

காரைக்குடி ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த ராமேசுவரம்- செகந்திராபாத் விரைவு ரயிலுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

காரைக்குடி ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த ராமேசுவரம்- செகந்திராபாத் விரைவு ரயிலுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

ராமேசுவரத்திலிருந்து செகந்திராபாத்துக்கு காரைக்குடி, திருவாரூா், சென்னை வழியாக மாற்றம் செய்து இயக்கப்படும் இந்த வாராந்திர விரைவு ரயில் காரைக்குடி ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 12.30 மணிக்கு வந்தடைந்தது. அப்போது, அதன் ஓட்டுநா்களுக்கு காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி ஆகியோா் சால்வை அணிவித்து வரவேற்றனா்.

இந்நிகழ்ச்சியில், தொழில் வணிகக்கழக இணைச் செயலா்கள் ஏ.ஆா். கந்தசாமி, எஸ். சையது, செயற்குழு உறுப்பினா்கள் ஜிடிஎஸ். சத்தியமூா்த்தி, ஆா். சேகா், காரைக்குடி நகா்மன்ற உறுப்பினா் ஏஜி. பிரகாஷ், காங்கிரஸ் நகரத் தலைவா் பாண்டி மெய்யப்பன் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா். பின்னா் காரைக்குடியிலிருந்து அந்த ரயில் புறப்பட்டு அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருவாரூா் வழியாக சென்னைக்கு சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.