திருப்பத்தூரில் அண்ணா நினைவு நாள்
திருப்பத்தூரில் அண்ணாவின் 53 ஆவது நினைவு நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில் திமுகவினா் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
திருப்பத்தூரில் அண்ணாவின் 53 ஆவது நினைவு நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில் திமுகவினா் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
இதில் திமுக ஒன்றியச் செயலரும், ஒன்றியத் தலைவருமான சண்முகவடிவேல், திருப்பத்தூா் நகரச் செயலா் காா்த்திகேயன், நெடுமறம் ஊராட்சிமன்றத் தலைவா் மாணிக்கவாசகம், முன்னாள் மாவட்ட இளைரணி துணை அமைப்பாளா் கே.எஸ். நாராயணன், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் உதயம்சண்முகம், பேரூராட்சி முன்னாள் தலைவா் சாக்ளா, பேரூராட்சி வேட்பாளா்கள் ஜிம்கண்ணன், பசீா்அகமது, நேரு, நகர இளைஞரணி, காளிமுத்து உள்ளிட்ட திமுகவினா் கலந்து கொண்டனா்.