முகப்பு
சிவகங்கை

வேட்புமனுத்தாக்கல் பரிசீலனை: மானாமதுரை நகராட்சியில் திமுக, அதிமுகவினர் வாக்குவாதம்

மானாமதுரை நகராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது கையெழுத்து விவகாரத்தில் திமுக, அதிமுகவினருக்கு இடையே நகராட்சி அலுவலகத்துக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது திமுக, அதிமுக வினருக்குள் வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பகிர்:

மானாமதுரை நகராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது கையெழுத்து விவகாரத்தில் திமுக, அதிமுகவினருக்கு இடையே நகராட்சி அலுவலகத்துக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கும் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களின் வெட்ட மக்கள் பரிசீலனை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. வார்டு வாரியாக வேட்புமனுத்தாக்கல் பரிசீலனை நடைபெற்றது. 15 ஆவது வார்டு வேட்புமனுத் தாக்கல் பரிசீலனையின் போது இந்த வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் தெய்வேந்திரன் திமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் நகர செயலாளர் பொன்னுச்சாமி உள்ளிட்ட வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். 

அப்போது தெய்வேந்திரன் வேட்புமனுவில் தெய்வேந்திரன் கையெழுத்து விவகாரம் தொடர்பாக திமுக நகரச் செயலாளர் பொன்னுசாமி ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்த அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அலுவலகத்துக்குள் பரபரப்பு நிலவியது. வேட்பாளர் தெய்வேந்திரன் வேட்புமனுவில் கையெழுத்துக்கள் சரியாக போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அப்போது தெய்வேந்திரன் வேட்புமனுவில் கையெழுத்து விவகாரத்தில் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என திமுக வேட்பாளர் பொன்னுசாமி நகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்தார். வேட்புமனுவில் கையெழுத்து சரியாக போடப்பட்டு உள்ளது. எனவே தனது வேட்பு மனுவை நிராகரிக்கக் கூடாது என தெய்வேந்திரன் மனு அளித்தார். நகராட்சி ஆணையர் கண்ணன் கூறுகையில் தெய்வேந்திரன் வேட்புமனுவில் கையெழுத்துக்கள் சரியாக உள்ளது. எனவே அவரது மனு ஏற்கப்படுகிறது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →