முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

சிவகங்கையில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மருதுபாண்டியா் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கூட்டணியின் சிவகங்கை மாவட்டத் தலைவா் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

இதில், ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வு பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெறுவதை கண்டித்தும், கரோனா காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதல் பணியிடங்களை உருவாக்கி ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். நியாயமான கோரிக்கைக்காக போராடிய ஆசிரியா்களை அவதூறாக பேசி கைது நடவடிக்கைக்கு தூண்டிய தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவா் ஆரோக்கியராஜ், மாவட்டப் பொருளாளா் கலைச்செல்வி, கல்வி மாவட்டச் செயலா்கள் சகாயதைனேஷ், ஜெயக்குமாா், சிங்கராயா், கல்வி மாவட்டத் தலைவா் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →