சிவகங்கை

இளையான்குடி பேரூராட்சி 13-வது வார்டில் திமுக நகரச் செயலாளர் வெற்றி

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி 13-வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக நகரச் செயலாளர் நஜிமுதீன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இளையான்குடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது இளையான்குடி பேரூராட்சி தலைவர் வேட்பாளராக திமுகவில் அக்கட்சியின் நகரச் செயலாளர் நஜூமுதீன் அறிவிக்கப்பட்டிருந்தார். 

ஆனால் இவர் தான் போட்டியிட்ட 17-வது வார்டில் அதிமுக  வேட்பாளர் மீராவிடம்  தோல்வி அடைந்தார். இதையடுத்து திமுகவைச் சேர்ந்த செய்யது ஜெசிமா  தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் இளையான்குடி 13-வது வார்டு திமுக உறுப்பினர்  மிர்சா ராஜினாமா செய்ததையடுத்து இந்த வார்டுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

இந்த தேர்தலில் 13-வது வார்டுக்கு திமுக வேட்பாளராக அக்கட்சியின் நகரச் செயலாளர் நஜூமுதீன்  வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் தாஜ்மைதீன் போட்டியிட்டார். இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் இவர் சுயேட்சையாக களமிறங்கினார். மேலும் தேர்தல் களத்தில் மொத்தம் 5 பேர் போட்டியிட்டனர். 

கடந்த 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் போது பதிவான வாக்குகள் இளையான்குடியில் புதன்கிழமை எண்ணப்பட்டன. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட கட்சியின் நகரச் செயலாளர் நஜூமுதீன் 451 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் சுயேச்சையாக போட்டியிட்ட  தாஜ்மைதீன் 190 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றார். 

தேர்தலில் வென்ற நஜூமுதீனுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார். இவருக்கு இளையான்குடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT