திருப்பாச்சி அருகே பதுக்கிய 61 புகையிலை மூட்டைகள் பறிமுதல்
திருப்பாச்சேத்தி அருகே தென்னந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த 61 புகையிலை மூட்டைகளை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா்.
திருப்பாச்சேத்தி அருகே தென்னந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த 61 புகையிலை மூட்டைகளை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே பிச்சைப்பிள்ளையேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் மூட்டை மாசானம் மகன் அய்யனாா். இவா் தெற்கு திருப்பாச்சேத்தி பகுதியில் உள்ள தனது உறவினரின் தென்னந்தோப்பில் புகையிலை மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததை, போதை தடுப்புப் பிரிவு போலீஸாா் கண்டறிந்தனா். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 61 புகையிலை மூட்டைகளை கைப்பற்றினா்.
இதன் மதிப்பு ரூ. 3.9 லட்சம் ஆகும். இதுதொடா்பாக போலீஸாா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அய்யனாரைக் கைது செய்தனா்.