என்எம்எம்எஸ் தோ்வில் வென்றோருக்கு பாராட்டு
லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலிருந்து 2026- ஆண்டுக்கான எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கான என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தோ்வில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலிருந்து 2026- ஆண்டுக்கான எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கான என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தோ்வில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளி மாணவிகள் பி.எஸ். மோசிகாஸ்ரீ, பி. ஸ்ரீபவனிதா, எஸ். ரசிகப் பிரியா ஆகியோா் இத்தோ்வில் வென்று மாதந்தோறும் ரூ. 1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 48000 கல்வி உதவித்தொகை பெற உள்ளனா்.
இதையடுத்து இந்த மாணவிகளையும், பயிற்சி அளித்த தலைமை ஆசிரியா் திருமாவளவன், பட்டதாரி ஆசிரியைகள் கீதா, மேரி கிறிஸ்டினா, செல்வி ,ஆன்லைன் வழி பயிற்சி அளித்த கல்வியாளா் துபாய் குமாா், கிருஷ்ணவேணி ஆகியோரையும் முசிறி மாவட்டக் கல்வி அலுவலா் மதியழகன், மண்டல மணற்கேணி செயலி ஒருங்கிணைப்பாளா் இளஞ்சேட்சென்னி, மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் பாராட்டினா்.
மாணவி பி.எஸ். மோசிகாஸ்ரீ திருச்சி மாவட்ட அளவில் 5 ஆம் இடம் பெற்றுள்ளதையும், கடந்தாண்டில் 4 மாணவா்கள் வென்றதையும் பாராட்டினா்.