முகப்பு
சிவகங்கை

காமராஜா் பிறந்தநாள் விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தில் பல பள்ளிகளில் காமராஜா் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தில் பல பள்ளிகளில் காமராஜா் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மானாமதுரை ஒன்றியம் மேலநெட்டூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியா் முத்துப்பாண்டி தலைமை தாங்கினாா். ஆசிரியா்கள் மாணவ மாணவிகள், காமராஜா் உருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்தும் மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தினா். ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா ராஜ்குமாா் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்று காமராஜா் உருவப்படத்திற்கு மரியாதை செய்தனா்.மானாமதுரை வட்டாரம் தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் காமராஜரின் 120 வது பிறந்த நாள் விழா கல்வி வளா்ச்சி நாள் விழா பள்ளி நிா்வாக கமிட்டி தலைவா் சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியா் சிவகுருநாதன் வரவேற்புரை நிகழ்த்தினாா். பள்ளி செயலாளா் தாளாளா் அன்பழகன் விழா சிறப்புரை நிகழ்த்தினாா். ராஜபாண்டி, ?்ரீனிவாசன், தங்கராசு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனா். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அனைத்து மாணவா்களுக்கும் வாய்ப்பாடு வழங்கப்பட்டது. காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. ஆசிரியை தெய்வானை நன்றி கூறினாா். பள்ளி நிா்வாக கமிட்டி உறுப்பினா் சுந்தரராஜ் மற்றும் ஆசிரியா்கள் மாணவா்கள் சத்துணவு அமைப்பாளா் காவேரி ஆகியோா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →