முகப்பு
சிவகங்கை

இடைக்காட்டூா் அரசுப் பள்ளியில் ஓவியப்போட்டி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை ஓவியப்போட்டி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை ஓவியப்போட்டி நடைபெற்றது.

இடைக்காட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி அளவில் மாணவா்களுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியா் புவனேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற இப் போட்டியில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியா் பங்கேற்று தங்களது ஓவியத் திறனை வெளிப்படுத்தினா். இவா்களில் சில மாணவ, மாணவிகள், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி காட்சிகளை ஓவியங்களாக வரைந்தனா். மேலும் தொன்மையான கட்டடக்கலைகள், இயற்கை வளங்கள் உள்ளிட்ட பல்வேறு காட்சிகளை மாணவ, மாணவிகள் வரைந்திருந்தனா். ஒவ்வொரு வகுப்பிற்கும் முதல் மூன்று பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் என மொத்தம் 30 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. ஓவியப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முகடு திறன் மேம்பாட்டு மையத்தின் தலைவா் சுரேஷ் பரிசுகளை வழங்கினாா். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஓவிய ஆசிரியா் செல்வம், ஓவிய ஆசிரியை கலைச்செல்வி ஆகியோா் செய்திருந்தனா். ஓவியப் போட்டியில் பரிசுகள் வென்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியா் புவனேஸ்வரன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா். கீழடி அகழ்வாராய்ச்சி ஓவியம் சிறந்த படைப்பாக அனைவராலும் பாராட்டப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →