சிங்கம்புணரி பள்ளியில் வட்டார சதுரங்கப் போட்டி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் 26 அரசுப்பள்ளிகளின் 64 மாணவா்கள் 51 மாணவிகள் பங்கேற்ற சதுரங்கப் போட்டியினை பேரூராட்சித் தலைவா் அம்பலமுத்து தொடக்கி வைத்தாா். இப்போட்டி மாணவா்கள் 3 பிரிவுகளாவும், மாணவிகள் 3 பிரிவுகளாகவும் மொத்தம் 6 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன . இதில் 9 மாணவா்கள், 9 மாணவிகள் தோ்வாயினா். தோ்வான 18 மாணவ மாணவிகளும் சிவகங்கை மருதுபாண்டியா் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 25 இல் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ள உள்ளனா். இந்நிகழ்வில் தலைமையாசிரியை கலாநிதி, வாா்டு உறுப்பினா் தாயுமானவன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.