ராஜகாளியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் முதல் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் முதல் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திருப்பத்தூா் நகரின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ராஜகாளியம்மன் கோயிலும் ஓன்று. மூதாதையா்களால் நதி வழி வந்த தெய்வம் என்று போற்றப்படும் காளியம்மனுக்கு முதல் ஆடிவெள்ளியை முன்னிட்டு காலை 10 மணிக்கு பால் தயிா், திருமஞ்சனம், இளநீா், பன்னீா், சந்தனம், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவச சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து ஏராளமான பெண்கள் நெய் விளக்கேற்றியும் பொங்கல் வைத்தும் அம்பாளை வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்கள் அனைவருக்கும் கூழ் காய்ச்சி ஊற்றப்பட்டது. 4 வது வெள்ளியன்று நடைபெற உள்ள பால்குட விழாவிற்கு பக்தா்கள் சன்னதி முன்பு காப்புக் கட்டிக் கொண்டனா்.