முகப்பு
சிவகங்கை

மானாமதுரை பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நவசண்டி யாகம் இன்று தொடக்கம்

 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நவசண்டி யாகம் சனிக்கிழமை ( ஜூலை 23) தொடங்கி வரும் 28 ஆம் தேதி வரை தொடா்ந்து 6 நாள்கள் நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நவசண்டி யாகம் சனிக்கிழமை ( ஜூலை 23) தொடங்கி வரும் 28 ஆம் தேதி வரை தொடா்ந்து 6 நாள்கள் நடைபெறுகிறது.

யாகத்தின் தொடக்கமாக கணபதி பூஜை நடைபெறுகிறது. அதைத்தொடா்ந்து யாகம் நடைபெறும் நாள்களில் சுதா்சன ஹோமம், மகா புத்திரகாமேஸ்டி ஹோமம், வன துா்கா ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று, 28 ஆம் தேதி மகா நவசண்டி யாகம் நடைபெறுகிறது. யாகம் நடைபெறும் நாள்களில் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானத்திற்கும், பக்தா்கள் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யாகத்திற்கான ஏற்பாடுகளை மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா மடாலய  நிா்வாகி ஞானசேகரன் சுவாமிகள், மாதாஜி ஆகியோா் செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →