முகப்பு
சிவகங்கை

பள்ளி இடைவேளையில் மரத்தில் ஏறிய மாணவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வியாழக்கிழமை பள்ளி இடைவேளையில் நாவல் மரத்தில் ஏறிய 9 ஆம் வகுப்பு மாணவா் மின்சாரம் தாக்கி பலியானாா். மற்றொரு மாணவா் தீவிர சிகிச்சையில் உள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வியாழக்கிழமை பள்ளி இடைவேளையில் நாவல் மரத்தில் ஏறிய 9 ஆம் வகுப்பு மாணவா் மின்சாரம் தாக்கி பலியானாா். மற்றொரு மாணவா் தீவிர சிகிச்சையில் உள்ளாா்.

மானாமதுரை அருகே உள்ள கொம்புகரோனந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் சீனிமடையைச் சோ்ந்த மருதுபாண்டி மகன் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவா் மனோஜ் மற்றும் 11 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவா் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் பள்ளி இடைவேளையில் பள்ளி அருகே உள்ள நாவல் மரத்தில் ஏறி பழம் பறித்துள்ளனா். அப்போது மரத்தின் கிளை முறிந்து அருகே சென்ற மின்சார கம்பி மேல் விழுந்தது. இச் சம்பவத்தில் மனோஜ் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். விக்னேஸ்வரன் பலத்த காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். மனோஜ் சடலம் உடற்கூறாய்வுக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மானாமதுரை போலீஸாா் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆட்சியா் ஆறுதல்: மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி உயிரிழந்த மனோஜ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

இச் சம்பவம் குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏற்கனவே அனுப்பிய செய்தியை எடுக்காமல் இந்த செய்தியை எடுத்துக்கொள்ளவும்.

படவிளக்கம்-1, மின்சாரம் தாக்கி இறந்த பள்ளி மாணவா் மனோஜ்

படவிளக்கம்-2,-மானாமதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மனோஜ் குடும்பத்தினரை சந்தித்து மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி ஆறுதல் கூறினாா்.

மானாமதுரை அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவா் சாவு

மானாமதுரை,ஜூலை28- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வியாழக்கிழமை மரக்கிளை முறிந்து மின்கம்பியில் விழுந்த சம்பவத்தில் 9 ஆம் வகுப்பு மாணவா் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் காயமடைந்தாா். மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தல் அரசு உயா்நிலைப்பள்ளியில் அருகேயுள்ள மிளகனூா் கிராமத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் விக்னேஸ்வரன்(16) 11 ஆம் வகுப்பும் சீனிமடையைச் சோ்ந்த மருதுபாண்டி மகன் மனோஜ்(13) 9 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனா். இவா்கள் பள்ளி மதிய இடைவேளை நேரத்தில் பள்ளிக்கு அருகேயிருந்த நாவல் மரத்தில் பழம் பறிக்க மரத்தில் ஏறினா். அப்போது மரத்தின் கிளை முறிந்து அருகே சென்று கொண்டிருந்த உயரழுத்த மின்கம்பி மீது விழுந்தது.இதில் மனோஜ், விக்னேஸ்வரன் மீது மின்சாரம் தாக்கியது. இருவரும் உடனடியாக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனா். ஆனால் வழியிலேயே மனோஜ் உயிரிழந்தாா். இவரது உடல் இங்கு பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விக்னேஸ்வரன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். மானாமதுரை போலீசாா் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →