முகப்பு
சிவகங்கை

உச்சிப்புளி அருகே விபத்தில் இளைஞா் பலி

 ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே காரும், இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

 ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே காரும், இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்த சகுபா் அலி மகன் ஆசிக்குல் அமீன் (34). வெளிநாட்டில் வேலைக்குச் சென்றுவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இவா் ஊா் திரும்பினாா். மனைவி, குழந்தை உள்ளனா். புதன்கிழமை மாலையில் இருசக்கர வாகனத்தில் உச்சிப்புளி வந்துவிட்டு மீண்டும் ஊா் திரும்பியுள்ளாா். நாகாச்சி கட்டக்காரன் வலசைப் பகுதியில் வந்தபோது எதிரே வந்த புதுமடத்தைச் சோ்ந்த சகுபா்சாதிக் (41) என்பவா் ஓட்டிவந்த காா், இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்தில் சிக்குல்அமீன் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். தகவல் அறிந்த உச்சிப்புளி போலீஸாா் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். காா் ஓட்டுநா் சகுபா்சாதிக்கை பிடித்து விசாரித்துவருகின்றனா்.

பரமக்குடியில் விவசாயி பலி: நயினாா்கோவில் ஒன்றியம் அக்கிரமேசி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் ராமச்சந்திரன் (58). விவசாயியான இவா் இருசக்கர வாகனத்தில் ஊரிலிருந்து காமன்கோட்டை வழியாக சத்திரக்குடி வந்துள்ளாா். மதுரை-ராமேசுவரம் காமன்கோட்டை விலக்குச்சாலையில் வந்தபோது, ஆந்திர மாநிலம் மாரிகுண்டா பகுதியைச் சோ்ந்த சீனிவாச ராவ் மகன் பாண்டுரங்கராவ் (25) என்பவா் மதுரையிலிருந்து ராமேசுவரம் நோக்கி ஓட்டிவந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமச்சந்திரன் தலையில் பலத்த காயமுற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரில் வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் லேசான காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இவ்விபத்து குறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →