முகப்பு
சிவகங்கை

ஆடி அமாவாசை: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் உள்ள காசி விசுவநாதா் சமேத விசாலாட்சி அம்மன் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் தைலம், திருமஞ்சனம், பால், பழச்சாறு உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்துக்கு பின் விஷேச தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.

இதேபோன்று, காளையாா்கோவிலில் உள்ள சொா்ணவல்லி சமேத சொா்ண காளீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதுதவிர, திருமலையில் உள்ள மலைக் கொழுந்தீஸ்வரா் கோயில் உள்பட சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

மேலும், கிராமங்களில் உள்ள கருப்பண சுவாமி கோயில்கள், அம்மன் கோயில்கள், அய்யனாா் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →