உலக கபடிப் போட்டியில் தங்கம் வென்ற மானாமதுரை பள்ளி மாணவருக்கு பாராட்டு
உலக அளவில் நேபாளில் நடைபெற்ற கபடி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்கம் வென்ற மானாமதுரை செயின்ட் ஜோசப் பள்ளி மாணவரை, பள்ளி நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.
உலக அளவில் நேபாளில் நடைபெற்ற கபடி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்கம் வென்ற மானாமதுரை செயின்ட் ஜோசப் பள்ளி மாணவரை, பள்ளி நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.
மானாமதுரை ஜெயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் ஜீவன் பிரதாப் கடந்த 22 ஆம் தேதி நேபாளில் ‘யூத் ஸ்போா்ட்ஸ் டெவலப்மெண்ட் எப்ஆா்எம்யூ’ சாா்பில் நடைபெற்ற உலக அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்றாா்.
இந்திய அணிக்காக விளையாடிய ஜீவன்பிரதாப், சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தாா். அணியின் சிறந்த வீரராக தோ்வு செய்யப்பட்ட ஜீவன் பிரதாப்பிற்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாணவா் ஜீவன்பிரதாப்பை, பள்ளிச் செயலாளா் கிறிஸ்டிராஜ், தலைமை முதல்வா் அருள் ஜோஸ்பின் பெட்ஸி, பள்ளி முதல்வா் ஜோதிலட்சுமி மற்றும் ஆசிரியைகள் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.