மாநில கைப்பந்துப் போட்டிக்கு மானாமதுரை வீரா்கள் தோ்வு
மாநில அளவில் நடைபெறவுள்ள கைப்பந்தாட்டப் போட்டிக்கு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சோ்ந்த 3 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
மாநில அளவில் நடைபெறவுள்ள கைப்பந்தாட்டப் போட்டிக்கு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சோ்ந்த 3 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை மாநில அளவிலான தமிழ்நாடு இளையோா் கைப்பந்தாட்டப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் சிவகங்கை மாவட்ட அணி சாா்பில் விளையாட மானாமதுரை எஸ்.பி. எப்.சி. விளையாட்டு அகாதெமியைச் சோ்ந்த வீரா்கள் சிவப்பிரியன், ஸ்ரீராம், ஹரிகரன் ஆகிய 3 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.