சிவகங்கை

சாலைகிராமம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம் அருகே வடக்கு விசவனூா் கிராமத்தில் சனிக்கிழமை வடநாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.

வடக்கு விசவனூா் பாலாருடைய அய்யனாா் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த மஞ்சுவிரட்டு விழாவில் பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 20- க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

மஞ்சுவிரட்டைக் காண ஏராளமானோா் திரண்டிருந்தனா். ஏராளமான மாடுபிடி வீரா்கள் அணி அணியாகப் பங்கேற்று காளைகளைப் பிடிக்க முயன்றனா். பல காளைகள் வீரா்களிடம் பிடிகொடுக்காமல் போக்கு காட்டின. பிடிபடாத காளைகளுக்கும், காளைகளைப் பிடித்த வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

மாலை 5.15 மணி: பாஜக 24, காங்கிரஸ் 7 தொகுதிகளில் வெற்றி

தேர்தல் நிலவரத்தில் அறியப்படும் செய்தி என்ன? ஆம் ஆத்மி

நாசிக் : விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானம் !

ம.பி.யில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT