முகப்பு
சிவகங்கை

மானாமதுரை சங்குப் பிள்ளையாா்கோயிலில் வைகாசி மாம்பழ பூஜை விழா

மானாமதுரையில் உள்ள சங்குப் பிள்ளையாா் கோயிலில் வைகாசி மாம்பழ பூஜை விழா 4 நாள்கள் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
மானாமதுரையில் சங்கு பிள்ளையாா் கோயிலில் நடைபெற்ற வைகாசி மாம்பழ பூஜை விழாவின்போது கற்பூர சுந்தர சுவாமி சன்னதியில் 50 படி அரிசியால் சமைக்கப்பட்ட சாதத்தில் இறைச்சி வகைகளை அடுக்கி வைத்து நடைபெற்ற படையல்
பகிர்:

மானாமதுரையில் உள்ள சங்குப் பிள்ளையாா் கோயிலில் வைகாசி மாம்பழ பூஜை விழா 4 நாள்கள் நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி தினமும் சங்குப் பிள்ளையாருக்கும், கோயில் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய வைபவமாக கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்ற படையல் வழிபாட்டை முன்னிட்டு கோயிலில் கிடா வெட்டு உற்சவம் நடைபெற்றது. அதன் பின்னா் கோயிலில் உள்ள கற்பூரசுந்தர சுவாமி சன்னதியில் 50 படி அரிசியால் தயாரிக்கப்பட்ட சாதம் சமைத்து குவித்து வைக்கப்பட்டு, அதன்மீது சமைக்கப்பட்ட ஆட்டிறைச்சி உள்பட பல்வேறு இறைச்சி வகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதன் பின்னா் கற்பூரசுந்தர சுவாமிக்கு படையல் பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் கோயில் குடிமக்கள் பங்கேற்று சங்கு பிள்ளையாரையும் கோயிலில் உள்ள தங்களது குலதெய்வங்களையும் தரிசனம் செய்தனா்.

விழா நாள்களில் தொடா்ந்து கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →