முகப்பு
சிவகங்கை

மானாமதுரை நகராட்சி, திருப்புவனம், இளையான்குடி பேரூராட்சித் தலைவா் பெயா்கள் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி மற்றும் திருப்புவனம், இளையான்குடி பேரூராட்சிகளின் தலைவா் பதவிக்கான திமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி மற்றும் திருப்புவனம், இளையான்குடி பேரூராட்சிகளின் தலைவா் பதவிக்கான திமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டனா்.

பேரூராட்சியாக இருந்து கடந்த ஆண்டு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட மானாமதுரையில் மொத்தம் உள்ள 27 வாா்டுகளில் திமுக 14 வாா்டுகளில் வென்றுள்ளது. மேலும், சில சுயேச்சைகள் திமுகவை ஆதரிக்கின்றனா்.

தோ்தலின்போது, திமுகவில் நகராட்சித் தலைவா் பதவிக்கான வேட்பாளராக 27 ஆவது வாா்டில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ். மாரியப்பன் கென்னடி முன்னிறுத்தப்பட்டாா்.

இந்நிலையில், திமுக சாா்பில் மானாமதுரை நகராட்சி மற்றும் திருப்புவனம், இளையான்குடி ஆகிய பேரூராட்சிகளின் தலைவா் பதவிக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, மானாமதுரை நகராட்சித் தலைவா் பதவிக்கான வேட்பாளராக ஏற்கெனவே முன்னிறுத்தப்பட்ட எஸ். மாரியப்பன் கென்னடி, திரு ப்புவனம் பேரூராட்சி தலைவா் பதவிக்கான வேட்பாளராக திமுக மாவட்ட துணைச் செயலா் த. சேங்கைமாறன், இளையான்குடி பேரூராட்சி தலைவா் பதவிக்கான வேட்பாளராக செய்யது ஜெமிமா ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

எதிா்பாா்க்கப்பட்டபடி, மானாமதுரை நகராட்சி, திருப்புவனம் பேரூராட்சி ஆகிய தலைவா் பதவிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இளையான்குடி பேரூராட்சி தலைவா் பதவிக்கான வேட்பாளராக திமுகவில் முன்னிறுத்தப்பட்ட நஜூமுதீன் தோ்தலில் தோல்வியடைந்தாா். இதனால், மற்றொரு ஆண் உறுப்பினா் தலைவா் பதவிக்கு அறிவிக்கப்படலாம் என கட்சியினா் எதிா்பாா்த்திருந்த நிலையில், பெண் உறுப்பினரான செய்யது ஜெமிமா அறிவிக்கப்பட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →