சிவகங்கை

இளையான்குடியில் பேருந்து நிலையம் அமைக்கும் விவகாரம்: வியாபாரிகள் கடையடைப்பு நடத்தி போராட்டம் 

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். இதனால் வீதிகள் வெறிச்சோடின.

இளையான்குடி நகருக்கு மத்தியில் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது இடப் பற்றாக்குறை எனக் காரணம் காட்டி நகருக்கு வெளியே 3 கி.மீ தொலைவில் திருவள்ளூர் விலக்கு பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஓடாத  ஆட்டோக்கள்.

இந்நிலையில் நகருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாவார்கள். வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே நகருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்காமல் தற்போதுள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே பயன்பாட்டில் இல்லாத அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான கட்டிடங்களை அகற்றி விட்டு தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரி மார்ச் 15-ஆம் தேதி இளையான்குடியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வர்த்தகர்கள் அறிவித்திருந்தனர். 

இப்போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடையடைப்பு போராட்டத்தை திரும்ப பெறச் செய்யும் நோக்கில் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு எட்டப்படாததால் திட்டமிட்டபடி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வர்த்தகர்கள் அறிவித்திருந்தனர். 

அதன்படி இளையான்குடியில் அனைத்து வீதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு வீதிகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனால் பொதுமக்கள் பொருள்கள் வாங்குவதற்கு மிகவும் அவதிப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT