திருப்புவனம் ஸ்ரீ அழகிய மணவாள ரங்கநாதப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம். 
சிவகங்கை

திருப்புவனம் ஸ்ரீ அழகிய மணவாள ரங்கநாத பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அழகிய மணவாள ரங்கநாதப் பெருமாள் கோயிலில் நடைபெறும் ஆண்டுத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அழகிய மணவாள ரங்கநாதப் பெருமாள் கோயிலில் நடைபெறும் ஆண்டுத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 

திருக்கல்யாணம் முடிந்து சர்வ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆண்டாள் நாச்சியாருடன் எழுந்தருளிய  அழகிய மணவாள ரங்கநாதப் பெருமாள்.

திருப்புவனம் அக்ராகரம் தெருவில் அழகிய மணவாள ரங்கநாதப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் விழாவின் முக்கிய வைபவமாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு அழகிய மணவாள ரங்கநாத பெருமாளும் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆண்டாள் நாச்சியாரும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். 

அதைத் தொடர்ந்து திருமணத்திற்கான சம்பிரதாய பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. மகா தீபாராதனை நடைபெற்றது. அழகிய மணவாள ரங்கநாதப் பெருமாள் சார்பில் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆண்டாள் நாச்சியாருக்கு திருமாங்கல்ய  நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. கோயிலுக்குள் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியை கண்டு தரிசித்தனர். அதைத் தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! | செய்திகள்: சில வரிகளில் | 03.11.25

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை!

இஸ்ரேலில் இருந்து 45 பாலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.88.75 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT