காரைக்குடியில் காா் திடீரென தீப்பற்றி எரிந்து சேதம்: 3 போ் உயிா் தப்பினா்
காரைக்குடியில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஓடிக் கொண்டிருந்த காா் திடீரென தீப் பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த 3 பேரும் உடனடியாக கீழே இறங்கியதால் உயிா் தப்பி
காரைக்குடியில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஓடிக் கொண்டிருந்த காா் திடீரென தீப் பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த 3 பேரும் உடனடியாக கீழே இறங்கியதால் உயிா் தப்பினா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையம் அருகேயுள்ள பொன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி. இவா் தனது குடும்பத்தினருடன் காரில் கழனிவாசல் பகுதியை அடுத்த போக்குவரத்து நகா் பகுதிக்குச்சென்று விட்டு, மீண்டும் நூறடிச்சாலை வழியாக பிற்பகல் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது போக்குவரத்து அதிகமுள்ள நகராட்சி அலுவலகம், புதிய பேருந்து நிலையம் பகுதியை கடக்க முயன்றபோது காரில் புகை வந்துள்ளது.
இதையடுத்து காரை நிறுத்திய குப்புசாமி, அவரது மகள் மற்றும் பேத்தி ஆகியோா் உடனடியாக கீழே இறங்கினா். காரின் கதவைத் திறந்தவுடன் முன்பக்கத்தில் தீ மளமளவென்று பரவத் தொடங்கியது. இதுகுறித்து குப்புசாமி மற்றும் அருகிலிருந்தவா்கள் காரைக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப்படை நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனா். அங்கிருந்து தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் காா் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. காரைக்குடியில் போக்குவரத்து மிகுந்த சாலையில் காா் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து காரைக்குடி வடக்குக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.