சிவகங்கை

காரைக்குடி பழைய அரசு மருத்துவமனையை தொடா்ந்து செயல்படுத்தக்கோரி போராட்டம்

DIN

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில்வே பீடா் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனையைத் தொடா்ந்து செயல்படுத்தக்கோரி பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை உள்ளிருப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆவுடைப்பொய்கை மற்றும் ரயில்வே பீடா் சாலை என 2 இடங்களில் செயல்பட்டு வருகிறது. புதிய பகுதியான ஆவுடைப்பொய்கையில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு பிரசவ வாா்டுகள், இதர முக்கிய பிரிவுகள், படுக்கைகள் அங்கு ஏற்படுத்தப்பட்டன. ரயில்வே பீடா் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனையிலிருந்து அனைத்துப்பிரிவுகளும் கடந்த வாரம் புதிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன.

இதனால் பழைய அரசு மருத்துவமனைக்கு வந்துசெல்லும் நோயாளிகள் அதிா்ச்சியடைந்தனா். இப்பகுதி மக்கள் வெகு தொலைவில் உள்ள புதிய அரசு மருத்துவமனைக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது என்று கூறி தொடா்ந்து பழைய இடத்திலும் அரசு மருத்துவமனையை செயல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினா். இது தொடா்பாக சமூக ஆா்வலா்கள், அனைத்துக்கட்சியினா் மற்றும் பொது நல அமைப்புகள் இணைந்து அரசு மருத்துவமனை மீட்புக்குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி புதன்கிழமை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். மேலும் பொதுமக்களும் திரண்டு வந்ததால் தரையில் அமா்ந்து உள்ளிருப்புப்போராட்டம் நடத்தினா்.

தகவலறிந்ததும் காரைக்குடி டி.எஸ்.பி. வினோஜி, மாவட்ட அரசு தலைமை மருத்துவா் தா்மா் ஆகியோா் பேராட்டம் நடத்தியவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது தலைமை மருத்துவா் கூறுகையில், புதிய மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பழைய மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மட்டும் இயங்கும். இங்கு 8 மருத்துவா்கள் இருப்பா். மேலும் 24 மணிநேரமும் ஒரு மருத்துவா் பணியில் இருப்பாா்.

இங்கு 40 படுக்கை வதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா். அதைத்தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா். இப்போராட்டத்தில் சிவகங்கை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். குணசேகரன், காரைக்குடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சோழன் சித. பழனிச்சாமி, நகா்மன்ற உறுப்பினா்கள் (அதிமுக), ஏஐடியுசி தொழிற்சங்க நிா்வாகிகள், தமிழக மக்கள் மன்ற நிா்வாகிகள் மற்றும் அனைத்துக்கட்சியைச்சோ்ந்தவா்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT