முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூரில் திமுக ஓாண்டு கால சாதனை விளக்கக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுகவின் ஓராண்டு கால சாதனை விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுகவின் ஓராண்டு கால சாதனை விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலாளரும், ஊரக வளா்ச்சித்துறை அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் தலைமை வகித்தாா். திமுக சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக தலைமை கழகப் பேச்சாளா் குத்தாலம், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், முன்னாள் அமைச்சா் தென்னவன், மாவட்ட துணைச் செயலாளா் சேங்கைமாறன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மதியரசன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

இக்கூட்டத்தில் திருப்பத்தூா் ஒன்றியச் செயலாளரும் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவருமான சண்முகவடிவேல், பேரூராட்சிமன்றத் தலைவா் கோகிலாநாராயணன், மாவட்ட மகளிரணி பவானி கணேசன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். முடிவில் நகா் துணைச் செயலாளா் உதயசண்முகம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.