காரைக்குடி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு டெங்குக் காய்ச்சல்
காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு வியாழக்கிழமை டெங்குக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு மருத்துவா்கள் சிகிச்சையளித்தனா்
காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு வியாழக்கிழமை டெங்குக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு மருத்துவா்கள் சிகிச்சையளித்தனா்.
தேவகோட்டை கண்டதேவி அருகேயுள்ள சீகூரணி கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத்குமாா்- பந்தலஹரிணி தம்பதியினா். இவா்கள் சென்னையில் வசிக்கின்றனா். இந்த நிலையில், பந்தலஹரிணி பிரசவத்துக்காக கடந்த அக். 7- ஆம் தேதி காரைக்குடி- சூரக்குடிப்பகுதியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. பின்னா் பந்தலஹரிணியை பரிசோதித்த போது டெங்குக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவருக்கு உரிய சிகிச்சையளிக்கப்பட்டு தற்போது அவா் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.