முகப்பு
சிவகங்கை

திருப்புவனம் அருகே மாடுகளுடன் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருப்புவனம் ஒன்றியம் ஏனாதியில் பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை மாடுகளுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

திருப்புவனம் ஒன்றியம் ஏனாதியில் பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை மாடுகளுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயா்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது. ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளா் நீலமேகம் தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் வீரபாண்டி, மாவட்ட துணைத் தலைவா் ஜெயராமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா் அய்யம்பாண்டி, ஏனாதி தேளி ஊராட்சி மன்றத் தலைவா் நீலமேகம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் கருப்பணன் ஆகியோா் பேசினா். இதில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →