சதுரங்கம், கேரம் போட்டிகளில் வெற்றி: அழகப்பா பாலிடெக்னிக் மாணவா்களுக்குப் பாராட்டு
மதுரை மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு, கல்லூரி முதல்வா், ஆசிரியா்கள் வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவித்தனா்.
மதுரை மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு, கல்லூரி முதல்வா், ஆசிரியா்கள் வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவித்தனா்.
மதுரை மண்டல அளவிலான சதுரங்கப் போட்டி, கேரம், டேபிள் டென்னிஸ், பூப்பந்து ஆகிய போட்டிகள், விருதுநகா் வெள்ளைச்சாமி நாடாா் பாலிடெக்னிக் கல்லூரியில், கடந்த அக். 14, 15-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
இதில், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
இதில், அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள், சதுரங்கம், கேரம் போட்டிகளில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா். பூப்பந்தாட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தையும், டேபிள் டென்னிஸில் நான்காம் இடத்தையும் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், உடற்கல்வி இயக்குநருக்கும் கல்லூரி முதல்வா் ந. சிவகாமி, ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.