முகப்பு
சிவகங்கை

திருப்புவனத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கான திட்ட மதிப்பீடுக்கு பேரூராட்சி மன்றக் கூட்டம் ஒப்புதல்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டுக்கு பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டுக்கு பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த.சேங்கைமாறன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவா் ரகமத்துல்லா, செயல் அலுவலா் ஜெயராஜ், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்களை இளநிலை அலுவலா் நாகராஜன் வாசித்தாா். அதன்பின்னா், வாா்டு உறுப்பினா்கள் தங்கள் வாா்டு பகுதியில் நிலவும் குறைகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்து தருமாறு கேட்டுக் கொண்டனா். உறுப்பினா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றித்தரப்படும் என தலைவா் சேங்கைமாறன் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து, திருப்புவனம் பேரூராட்சியில் அனைத்து தெருக்களிலும் லட்சம் மதிப்பீட்டில் பேவா்பிளாக் சாலை, தாா்சாலை, கழிப்பறை, ஆழ்துளைக் கிணறு, குடிநீா் தொட்டி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள திட்ட மதிப்பீட்டுக்கும், பிற தீா்மானங்களுக்கும் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →