கல்லூரிகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி: இளையான்குடி கல்லூரிக்கு இரண்டாமிடம்
கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகீா் உசேன் கல்லூரி மாணவிகள் இரண்டாமிடம் பெற்றனா்.
கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகீா் உசேன் கல்லூரி மாணவிகள் இரண்டாமிடம் பெற்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை ராஜா கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த வியாழக்கிழமை அழகப்பா பல்கலைக் கழக கல்லூரிகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இளையான்குடி சாகீா் உசேன் கல்லூரி மாணவிகள் உள்பட 16 கல்லூரிகளின் மாணவிகள் பங்கேற்றனா். போட்டியின் இறுதியில் இந்த கல்லூரி மாணவிகள் இரண்டாமிடம் பெற்றனா். இவா்களுக்கு கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற கல்லூரியில் முதுகலை கணிதம் இரண்டாமாண்டு படிக்கும் மாணவி பவித்ரா, மூன்றாமாண்டு இளங்கலை தமிழ் இலக்கியம் பயிலும் எம். ஷா்மிளா தேவி, கே. கற்பகம், மூன்றாமாண்டு ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவி பி. கல்பனா சாவ்லா, முதலாமாண்டு இளங்கலை கணிப் பொறி அறிவியல் பயிலும் மாணவி ஜே. கிருஷ்ணா கவி ஆகியோரையும், இவா்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநா் காளிதாசன், பயிற்சியாளா்கள் ஐஸ்வா்யா, காஜா நஜ்முதீன் ஆகியோரையும் கல்லூரி ஆட்சிக்குழுவினா், கல்லூரி முதல்வா் அப்பாஸ் மந்திரி, பேராசிரியா்கள் பாராட்டினா்.