முகப்பு
தற்போதைய செய்திகள்

மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து குவைத் இளவரசருடன் பிரதமர் மோடி பேசியது குறித்து...

Updated On : 18 மார்ச், 2026 at 3:04 PM
பிரதமர் நரேந்திர மோடி
பகிர்:

குவைத் இளவரசர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-முபாரக் அல் சபா உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் இன்று (மார்ச் 18) பேசினார்.

புனித ரமலான் பண்டிகையையொட்டி வாழ்த்து தெரிவித்த மோடி, மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் குறித்தும் கேட்டறிந்தார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:

''மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழல் குறித்து நாங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம். மேலும், சமீபத்திய நிகழ்வுகள் குறித்த கவலைகளையும் பகிர்ந்து கொண்டோம்.

குவைத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வது எங்களின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது.

பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு, நீடித்த ராஜதந்திர ஈடுபாடு இன்றியமையாதது என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் அவரின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நான் நன்றி தெரிவித்தேன்'' என பிரதமர் பதிவிட்டுள்ளார்.

summary

PM Narendra Modi spoke with Sheikh Sabah Al-Khaled Al-Hamad Al-Mubarak Al-Sabah, Crown Prince of Kuwait

முழு கட்டுரையைப் படிக்க →