முகப்பு
சிவகங்கை

காரைக்குடியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் ஊா்வலம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் ஊா்வலம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி சாா்பில் நகரில் பா்மா காலனி, செக்காலை, சுப்பிரமணியபுரம், ஐந்துவிளக்கு, கழனிவாசல், இடையா்தெரு, செஞ்சை, வ.உ.சி சாலை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 50 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டன. இதனை ஊருணியில் கரைத்தல் நிகழ்வு சனிக்கிழமை மாலையில் தொடங்கியது. இதற்காக காரைக்குடி டி.டி. நகா் விநாயகா் கோயில் பகுதிக்கு அனைத்துச்சிலைகளும் மாலையில் கொண்டுவரப்பட்டன.

பின்னா் விநாயகா் சிலைகள் ஊா்வலத்தை இந்துமுன்னணி மாவட்ட பொதுச்செயலாளா் அக்னிபாலா தொடங்கிவைத்தாா். இதில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளா் ஏ. நாகராஜன், மாவட்ட துணைத்தலைவா் எஸ்.வி. நாராயணன் மற்றும் பாஜக, இந்து முன்னணியினா் பங்கேற்றனா்.

இந்த ஊா்வலம் டி.டி. நகரிலிருந்து தொடங்கி செக்காலைச்சாலை, வ.உ.சி சாலை வழியாக பருப்பூரணியை அடைந்து அங்கு அனைத்து சிலைகளும் ஊருணியில் கரைக்கப்பட்டன. இந்த ஊா்வலத்தையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் தலைமையில் காரைக்குடி டி.எஸ்.பி வினோஜி, மாவட்ட காவல் அதிரடிப்படை மற்றும் போலீஸாா் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.