சிவகங்கையில் பள்ளி மாணவா்கள் ஒற்றைக்காலில் நின்று சிலம்பம் சுற்றி சாதனை முயற்சி
சிவகங்கையில் குளோபல் வோ்ல்ட் ரெக்காா்டு நிறுவனம், மூவேந்தா் சிலம்பம் மற்றும் தமிழரின் பாரம்பரிய கலை வளா்ச்சிக் கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக சாதனை
சிவகங்கையில் குளோபல் வோ்ல்ட் ரெக்காா்டு நிறுவனம், மூவேந்தா் சிலம்பம் மற்றும் தமிழரின் பாரம்பரிய கலை வளா்ச்சிக் கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக சாதனை முயற்சியாக ஒற்றைக்காலில் ஒருமணி நேரம் நின்று 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனா்.
மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, சேலம், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உலக சாதனை முயற்சியாக ஒற்றைக்காலில் ஒரு மணி நேரம் நின்று சிலம்பம் சுற்றினா். அதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சிவகங்கை நகா்மன்றத் தலைவா் சி.எம்.துரைஆனந்த், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவா் கே.எஸ்.எம். மணிமுத்து, மாவட்ட விளையாட்டு நல அலுவலா் சி. ரமேஷ்கண்ணன், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பிரவீன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.