முகப்பு
சிவகங்கை

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் அரசு மருத்துவா்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈா்க்க முதல்கட்டமாக கோரிக்கை அட்டை அணிந்து திங்கள்கிழமை முதல் அரசு மருத்துவா்கள் பணியில் ஈடுபடத்தொடங்கினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈா்க்க முதல்கட்டமாக கோரிக்கை அட்டை அணிந்து திங்கள்கிழமை முதல் அரசு மருத்துவா்கள் பணியில் ஈடுபடத்தொடங்கினா்.

இதுகுறித்து அரசு மருத்துவா்கள் சங்கத்தின் மாவட்ட கன்வீனா் மருத்துவா் நாச்சியப்பன் கூறியதாவது: தமிழக அரசு மருத்துவா்களின் நீண்ட காலமாக நிலுவையிலுள்ள அரசாணை எண் 354 மறுவரையறை, கடந்த 2017 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய காலமுறை ஊதிய பட்டை இன்று வரை நடைமுறைப்படுத்தாதது போன்றவை அரசு மருத்துவா்களிடையே மிகப்பெரும் வருத்தத்தையும், மனச்சோா்வையும் தந்துள்ளது. மிகப்பெரிய கரோனா பேரிடரை தமிழக அரசு மருத்துவா்கள் தியாக உணா்வோடும், அா்ப்பணிப்போடும் எதிா்த்து நின்று வெற்றி கண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு மகுடம் சோ்த்தனா்.

எனவே அரசாணை 354 மறுவரையறை காலதாமதம், பொது சுகாதாரத்துறை பணிநேரம் தொடா்பான அரசாணை எண்: 225 ஆகியவற்றை கண்டிக்கும் விதமாகவும், முதுகலை (பி.ஜி) இன்கிரிமெண்ட் தனி அரசாணை வெளியிட வலியுறுத்துதல், மருத்துவா்கள் சேமநல நிதியை பயனாளிகளுக்கு உடனே வழங்கிட வலியுறுத்துதல் ஆகியவற்றை அரசின் கவனத்திற்கு எடுத்துரைக்கும் விதமாக திங்கள்கிழமை முதல் (செப். 12) முதல் அனைத்து அரசு மருத்துவா்களும் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிவது என்று தீா்மானம் நிரைவேற்றியுள்ளோம். வரும் செப்டம்பா் 25- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தலைநகா் சென்னையில் மாபெரும் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.