முகப்பு
சிவகங்கை

தென்மண்டல சிலம்பம் போட்டி: மானாமதுரை வீரா்கள் சாதனை

தென் மண்டல அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் மானாமதுரை வீரா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

தென் மண்டல அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் மானாமதுரை வீரா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

தஞ்சாவூரில் தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலைக் கழகம் மற்றும் தஞ்சை சக்சஸ் ட்ரெடிஷனல் ஆா்ட்ஸ் அகாதெமி , வீர தமிழச்சி சிலம்பப் பள்ளி இணைந்து தென்மண்டல அளவிலான சிலம்பம் போட்டியை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தின. இப் போட்டியில் மானாமதுரை சீனி ஆசான் சிலம்பப் பள்ளி மாணவா்கள் ஒற்றைக்கம்பு பிரிவு, இரட்டைக் கம்பு பிரிவு, சுருள்வாள் பிரிவு ஆகிய போட்டிகளில் பங்கேற்று 12 முதல் பரிசுகளையும், 16 இரண்டாம் பரிசுகளையும், 20 மூன்றாம் பரிசுகளையும் பெற்றனா். இவா்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மானாமதுரை புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வா் ஜோதிலட்சுமி திங்கள்கிழமை பரிசுக் கோப்பைகளை வழங்கிப் பாராட்டினாா். சிலம்பு பயிற்சியாளா்கள் ஆறுமுகம், செல்வம் மற்றும் முனியாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →