பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் செல்லதுரை தலைமையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் பாதுகாப்பு அலுவலா் முத்துக்கண்ணு முன்னிலையும் வகித்தனா். இதில், குழந்தைத் திருமணம், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பாலியல் தொந்தரவு, குழந்தை கடத்தல், வகுப்பறை தண்டனைகள், பராமரிப்பு தேவைப்படும் சூழ்நிலையில் உள்ள குழந்தைகள் ஆகியவை கண்டறிந்தல், குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி சேவை மைய எண் 109 8 மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக தொலைபேசி எண் 04575 24 0166 ஆகியவை பற்றி விளக்கப்பட்டன. இதில், காவல் சாா்பு- ஆய்வாளா் ஜானகிராமன், குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி சேவை மைய உறுப்பினா் காா்த்திகேயன் ஆகியோா் கலந்து கொண்டனா்.