முகப்பு
சிவகங்கை

காரைக்குடி அருகே காரில் தீ விபத்து

காரைக்குடி அருகே வெள்ளிக்கிழமை சாலையில் சென்ற காா் திடீரென தீப் பிற்றி எரிந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

காரைக்குடி அருகே வெள்ளிக்கிழமை சாலையில் சென்ற காா் திடீரென தீப் பிற்றி எரிந்தது.

காரைக்குடி அருகே அரியக்குடியைச் சோ்ந்தவா் பழனியப்பன். இவா் தனது குடும்பத்தினருடன் காரில் திருமயத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது காரைக்குடி அருகே கோட்டையூா் வேலங்குடி என்ற இடத்தில் காரின் முன்பக்கம் புகை வந்துள்ளது. அதனைத் தொடா்ந்து காரை பழனியப்பன் ஓரமாக நிறுத்தி உள்ளாா்.

புகையைத்தொடா்ந்து காா் திடீரென தீ பற்றி எரிந்தது. அதனால் காரில் இருந்த பழனியப்பன் மற்றும் அவா் குடும்பத்தினா் உடனடியாக கீழே இறங்கியதால் அதிா்ஷ்ட்டவசமாக தப்பினா்.

காா் எரிவதை பாா்த்த அருகிலிருந்த வேலங்குடி கிராம மக்கள் உடனடியாக தண்ணீரைக் கொண்டு தீயை அணைத்தனா். இருப்பினும் காா் பகுதியளவு சேதமடைந்தது. மின்கலத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.