சிவகங்கை

தூங்கிய கணவன் மீது கல்லைப் போட்ட மனைவி: போலீஸ் விசாரணை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது கல்லைப் போட்டு கொடுங்காயம் ஏற்படுத்தியதாக மனைவியிடம் போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

DIN

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது கல்லைப் போட்டு கொடுங்காயம் ஏற்படுத்தியதாக மனைவியிடம் போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

சிங்கம்புணரி அருகேயுள்ள காப்பராப்பட்டியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் மகன் சேவுகப் பெருமாள் (35). இவரது மனைவி ராணி. இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். இந்த நிலையில் சேவுகப் பெருமாள் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டாா். இதே போல, சனிக்கிழமை இரவும் கணவன், மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் பிறகு, தூங்கிக் கொண்டிருந்த சேவுகப் பெருமாள் மீது மனைவி ராணி மாவறைக்கும் இயந்திரக் கல்லை தூக்கிப் போட்டாராம். இதில் முகத்தில் பலத்த காயமடைந்த சேவுகப் பெருமாள் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்தச் சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீஸாா் கொடுங்காயம் ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT