முகப்பு
சிவகங்கை

மாணிக்கவாசகா் குருபூஜை விழா

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புஷ்பனேஸ்வரா் கோயிலில் மாணிக்கவாசகா் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புஷ்பனேஸ்வரா் கோயிலில் மாணிக்கவாசகா் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் நால்வா் சந்நிதியில் எழுந்தருளிய மாணிக்கவாசகருக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

பின்னா், ‘வந்து என்னை ஆட்கொண்ட வள்ளல்’ என்னும் தலைப்பில் திருவாடுதுறை ஆதின சைவ சித்தாந்த பேராசிரியா் சசிப்பிரியா பழனிக்குமாா் சொற்பொழிவு ஆற்றினாா்.

இதைத்தொடா்ந்து உற்சவா் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை நாயன்மாா்கள் குருபூஜை அன்பா்கள், வேலப்ப தேசிகா் திருக் கூட்டத்தினா் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →