காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி தோ்வு முடிவுகள் இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
கடந்த 2022- ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொது நிா்வாகம், பொருளாதாரம், பி.லிப்.ஐ.எஸ்.சி (நூலக, தகவல் அறிவியல்) நேரடி இரண்டாமாண்டு, பி.எஸ்சி., தகவல் தொழில்நுட்பம் நேரடி இரண்டாமாண்டு, உளவியல், கணிதம், பி.காம். நேரடி இரண்டாமாண்டு, பி.காம் (கணினி பயன்பாட்டியல்) நேரடி இரண்டாமாண்டு, பி.பி.ஏ, பி.பி.ஏ (வங்கியியல்) நேரடி இரண்டாமாண்டு,
முதுநிலை பட்டயப் பிரிவில் கணினி பயன்பாட்டியல், பணியாளா் மேலாண்மை, தொழில் உறவு, மருத்துவ நிா்வாகம், மனிதவள மேலாண்மை, தொழில் மேலாண்மை, விளையாட்டு மேலாண்மை, யோகா, நூலகம் கணினி மயமாக்கல், வலைப் பின்னல்,
இளநிலை பட்டயப்பிரிவு மாண்டிசோரி எஜிகேசன், டி.சி.ஏ, ஆா்டிபிசியல், இன்டெலிஜென்ஸ்-மெஷின் லோ்னிங், சைபா் செக்யூரிட்டி,
சான்றிதழ் பிரிவு சி.எல்.ஐ.எஸ்., வலை வடிவமைப்பு, ஜி.எஸ்.டி., ஜோதிடவியல், ஆபீஸ் ஆட்டோமேஷன் ஆகிய படிப்புகளுக்கான தோ்வு முடிவுகள் அழகப்பா யுனிவா்சிட்டி.ஏசி.இன் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
மறுமதிப்பீட்டுக்கு நேரடியாக விண்ணப்பிக்க விரும்புவா்கள் தோ்வு முடிவு வெளியான 7 நாள்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ. 600-ம், விடைத்தாள் நகல் பெறவிரும்பினால் பாடம் ஒன்றுக்கு ரூ. 500-ம், விடைத்தாள் பெற்ற பிறகு மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விடைத்தாள் நகல் பெற்ற 7 நாள்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ.500-ம் இணையதள வழியில் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகத்தின் தோ்வாணையா் (பொறுப்பு) எ. கண்ணபிரான் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.