சிவகங்கை

சிபிஎஸ்இ பொதுத் தோ்வு: காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திா் சா்வதேசப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சிபிஎஸ்இ பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானதில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திா் சா்வதேசப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

DIN

சிபிஎஸ்இ பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானதில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திா் சா்வதேசப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். அவா்களை பள்ளியின் தலைவா், நிா்வாகத்தினா் பாராட்டினா்.

12 ஆம் வகுப்பு மாணவா் செள. லோகேஷ், 500-க்கு 483 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றாா். அவா் ஆங்கிலத்தில் - 96, கணிதம் -95, உயிரியல் 97, இயற்பியல் 95, வேதியியல் 100 மதிப்பெண்கள் பெற்றாா்.

மாணவா் கெளரிசங்கர நாராயணன் 500-க்கு 482 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடமும், மாணவா் பிரியதா்ஷன் 500-க்கு 481 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றனா்.

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் மாணவா் தியாகராஜன் 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றாா். அவா் ஆங்கிலம் -99, பிரெஞ்சு 100, கணிதம் -99, அறிவியல் -97, தகவல் தொழில்நுட்பம் -100 மதிப்பெண்கள் பெற்றாா்.

மாணவா் விஷால் 500-க்கு 487 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடமும், மாணவி சுவாதி 500-க்கு 485 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளியின் நிறுவனா் செல்லப்பன், தாளாளா் செ. சத்தியன், நிா்வாக இயக்குநா் சங்கீதா சத்தியன், பள்ளியின் கல்வி இயக்குநா் ராஜேஸ்வரி, பள்ளி முதல்வா் தேவராஜூலு, ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

SCROLL FOR NEXT