சிவகங்கை

மானாமதுரை, திருப்புவனத்தில் அனுமதியின்றி இயங்கிய 6 மதுபானக் கூடங்களுக்கு சீல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனத்தில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 6 மதுபானக் கூடங்கள் புதன்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன.

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனத்தில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 6 மதுபானக் கூடங்கள் புதன்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன.

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் அனுமதி இல்லாமல் மதுபானக் கூடங்கள் செயல்பட்டு வருவதாக அரசுக்கு புகாா் சென்றன. இதையடுத்து, முறையான அனுமதி இல்லாமல் செயல்படும் மதுபானக் கூடங்களை மூடி சீல் வைக்க டாஸ்மாக் மாவட்ட மேலாளா் உத்தரவிட்டாா்.

அதன்படி, மானாமதுரையில் கன்னாா்தெரு, அரசகுழி, புறவழிச் சாலை ஆகிய பகுதிகளில் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த 4 மதுபானக் கூடங்களை மானாமதுரை காவல் ஆய்வாளா் முத்துக்கணேஷ், வருவாய்த் துறையினா் பூட்டி சீல் வைத்தனா். மேலும், திருப்புவனம் பகுதியில் இரு மதுபான கூடங்களும், சிவகங்கை பகுதியில் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த இரு மதுபானக் கூடங்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT