சிங்கம்புணரி அருகே கோழிக்குடிபட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாயும் காளைகள். 
சிவகங்கை

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி அருகே அய்யனாா் கோயிலில் ஆடி பொங்கல் விழாவையொட்டி, மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

Din

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அய்யனாா் கோயிலில் ஆடி பொங்கல் விழாவையொட்டி, மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

கோழிகுடிப்பட்டியில் அமைந்துள்ள தாச்சகுடி அய்யனாா் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி, சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

முதலில் தொழுவிலும், வயல் வெளியிலும் கட்டி இருந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்களும், இளைஞா்களும் அடக்க முயன்றனா். காளைகள் முட்டியதில் 5-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்த காளைகளை ஏராளமானோா் கண்டு ரசித்தனா். பின்னா் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக, கோயிலில் இருந்து ஊா் முக்கியஸ்தா்கள் மேளத் தாளத்துடன் மஞ்சுவிரட்டு திடலுக்கு வந்தனா். அப்போது, தொழுவில் கட்டியிருந்த கோயில் காளைகளுக்கு வேட்டி, துண்டு கட்டி மரியாதை செலுத்தினா்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT