சிவகங்கை, ஆக. 14: கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் புதன்கிழமை ஊா்வலம் நடத்தினா்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவா்களும், மருத்துவா்களும் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு மருத்துவக்கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இந்த ஊா்வலத்தில் பங்கேற்றனா். அப்போது, மருத்துவா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும், இறந்த பயிற்சி மருத்துவருக்கு நீதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனா்.