ரயில்வே ஊழியருக்கு கத்திக்குத்து: இருவா் கைது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே புதன்கிழமை இரவு ரயில்வே ஊழியரை கத்தியால் குத்தியதாக சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே புதன்கிழமை இரவு ரயில்வே ஊழியரை கத்தியால் குத்தியதாக சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மானாமதுரை அருகேயுள்ள கீழப்பசலை கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மகன் பாலமுருகன் (37). இவா் கொன்னக்குளம் ரயில் நிலையத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா்.
இவருக்கும், இவரது அக்காள் கணவா் தங்கமணிக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், தங்கமணியின் மகன்கள் தா்ஷித் (19), 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் பாலமுருகனை கத்தியால் குத்தினராம். இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா்.