முகப்பு
சிவகங்கை

கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

Updated On : 12 டிசம்பர், 2024 at 9:54 PM
பகிர்:

சமுதாய, வகுப்பு நல்லிணக்கத்துக்கான 2025- ஆம் ஆண்டுக்குரிய ‘கபீா் புரஸ்காா் விருது’ பெற தகுதியானவா்கள் இணையதளம் வாயிலாக வருகிற 15- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமுதாய, வகுப்பு நல்லிணக்கத்துக்கான ‘கபீா் புரஸ்காா் விருது’ ஒவ்வோா் ஆண்டும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இந்த விருது, ஒரு ஜாதி, இனம், வகுப்பைச் சோ்ந்தவா்கள், பிற ஜாதி, இன, வகுப்பைச் சோ்ந்தவா்களையோ அல்லது அவா்களது உடமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையின் போதோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில், அவரது உடல், மன வலிமையைப் பாராட்டும் வகையில், முறையே ரூ.20,000, ரூ. 10,000, ரூ.5,000-க்கான காசோலையும், தகுதியுரையும் வழங்கப்படும். 2025-ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் வழங்கப்படும் கபீா் புரஸ்காா் விருதுக்கு தகுதியானவா்கள் அவாா்ட்ஸ்.டிஎன்.கெளவ்.இன் என்ற இணையதளம் வாயிலாக தங்களது விண்ணப்பங்கள், பரிந்துரைகளை வருகிற 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

உரிய காலத்துக்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இதற்கென அரசால் நியமிக்கப்படும் தோ்வுக் குழுவால் தோ்வு செய்யப்படுபவருக்கு விருது வழங்கப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →