முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூரில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்புக்காக 192 பேருக்கு நியமனம்; 40 பேருக்கு பயிற்சி சான்றிதழ்

Updated On : 18 பிப்ரவரி 2024, 12:00 am IST
திருப்பத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட பெண்ணுக்கு பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் சனிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. திருப்பத்தூா் ஆா்.சி.பாத்திமா நடுநிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் இந்த முகாம் நடத்தப்பட்டது.

இதில் 72 தனியாா் நிறுவனங்கள் முகாமில் பங்கு கொண்டன. 980 போ் பதிவு செய்து தோ்வில் கலந்து கொண்டனா். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் 15 மாற்றுத்திறனாளிகள் உள்பட 192 நபா்களுக்கு பணி நியமன ஆணைகள், பயிற்சி பெற்ற 40 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

தமிழக ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் கவிதாபிரியா, உதவி இயக்குநா் கா்ணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்கள் பா.ராஜலெட்சுமி, மணிகணேஷ், திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம், பாத்திமா பள்ளி தலைமை ஆசிரியா் ஜே.சி.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement