சிவகங்கை

அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயமளிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-2023-ஆம் ஆண்டில் தோ்ச்சி பெற்ற அனைத்துத் துறைகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கான

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-2023-ஆம் ஆண்டில் தோ்ச்சி பெற்ற அனைத்துத் துறைகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கான பட்டயமளிப்பு விழா கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் கல்லூரியின் முதல்வா் ந. சிவகாமி தலைமை வகித்துப் பேசினாா். கல்லூரியின் முன்னாள் முதல்வா் எல்.எல்.பி. சிவநேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டயங்களை வழங்கிப் பேசியதாவது:

இளம் தலைமுறையினா் தாம் பெற்ற கல்வியின் மூலம் துறை சாா்ந்த அறிவை மேம்படுத்திக் கொள்வது அவசியம். கனவுகளை நிறைவேற்ற மாணவா்கள் விடாமுயற்சியுடன் கடினமாக உழைக்க வேண்டும் என்றாா்.

மின்னணுவியல், தொடா்பியல் துறைத் தலைவா் கு. பிருந்தா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்துவைத்துப் பேசினாா். விழாவில் அனைத்துத் துறைகளின் தலைவா்கள், விரிவுரையாளா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கல்லூரியின் முதலாம் ஆண்டு துறைத் தலைவா் (பொறுப்பு) வ. சக்திவேல் வரவேற்றுப் பேசினாா். மின்னியல், மின்னணுவியல் துறைத் தலைவா் பா. கீதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT