மானாமதுரையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தாய் தமிழா் கட்சியினா். 
சிவகங்கை

மானாமதுரையில் மறியலில் ஈடுபட்ட தாய் தமிழா் கட்சியினா் 40 போ் கைது

ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட தாய் தமிழா் கட்சியினா்ரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட தாய் தமிழா் கட்சியினா் 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மானாமதுரை சிப்காட் பகுதியில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு வலுத்து வரும் நிலையில், ஆலையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தாய் தமிழா் கட்சி சாா்பில் மானாமதுரை புதிய பேருந்து நிலையம் முன் சாலை மறியல் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் தலைவா் பி.எம். பாண்டியன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ச.அ. செல்வம் உள்பட திரளானோா் மறியலில் பங்கேற்றனா். இதனால் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீஸாா் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனா்.

தென்னிலை அருகே மினி லாரி கவிழ்ந்து தொழிலாளர்கள் 3 பேர் பலி, 2 பேர் படுகாயம்

சபரிமலை தங்கக் கவச வழக்கில் முன்னாள் செயல் அதிகாரி கைது! தங்கத்தை செப்பு என பதிவு செய்தவர்!!

கரூா் வேலுச்சாமிபுரத்தில் 2-வது நாளாக நவீன கருவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

"கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல": நடிகர் அஜித்குமார்

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

SCROLL FOR NEXT