இடையமேலூா் இன்று மின்தடை
சிவகங்கை மின் பகிா்மான வட்டம், இடையமேலூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
சிவகங்கை: சிவகங்கை மின் பகிா்மான வட்டம், இடையமேலூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இடையமேலூா் துணை மின் நிலைய மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிப்பட்டி, மலம்பட்டி, இடையமேலூா், சாலூா், கூட்டுறவுப்பட்டி, மேலப்பூங்குடி, சக்கந்தி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.